உள்நாடு

கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்களுக்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்; அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு

அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிகொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு ​கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டத்தின் முன், நிறுத்தப்படுவார்கள்.

சட்டம் அமுல்படுத்தப்படுகிறது என்ற உணர்வு மக்களிடம் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நாட்டில் நடந்தது சட்டத்தின் மீது மக்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு மீது சாமானிய மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது. வலுப்படுத்தாமல் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த முடியாது, சட்டத்தின் மீதுள்ள மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் தொடர்பில் மீள விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்படும், அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவார்கள் என்று நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறோம். சட்டம் மற்றும் அனுமதிக்கும் ஒரு மாநிலத்தை நாங்கள் விரும்புகிறோம்.

மக்களால் வெறுக்கப்படும் பாராளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

பாராளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும். இந்த பாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்திபெற வேண்டும். ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

‘Clean Sri Lanka’ கருத்திட்டத்துக்காக விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும். சிறந்த மாற்றத்துக்கு அரசியல் கட்டமைப்பு மாற்றமடைவதைப் போன்று, சமூக கட்டமைப்பும் மாற்றம் பெற வேண்டும்.

2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து 8 மில்லியன் டொலர் பொருளாதாரத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

5 வருடங்களுக்குள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடைய நிபுணர்களின் எண்ணிக்கையை 2 இலட்சமாக உயர்த்த எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.தகவல் தொழில்நுட்பத் துறையின் ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *