பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி சோபியா மனால் சதுரங்க போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு
கற்பிட்டி பள்ளிவாசல்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 06 ல் கல்வி பயிலும் முஹம்மது நதீம் சோபியா மனால் தேசிய சதுரங்க சம்மேளனத்தினால் நாத்தாண்டிய பாடசாலையில் இடம்பெற்றது மாகாண மட்ட சதுரங்க போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் றிஸ்கான் தெரிவித்துள்ளார்.
மேலும் இம்மாணவிக்கு பாடசாலை சார்பாக ஆசிரியர்களின் பங்களிப்புடன் பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது இவரை சிறந்த முறையில் வழிநடத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாடசாலை நிர்வாகம் சார்பாக நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)