உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி 25 ல் ஆரம்பமாகும்
கல்வி பொதுத் தராதர உயர் தர பரீட்சை திட்டமிட்டபடி நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம், உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த பரீட்சை நடைபெறும் திகதிகளுக்கு அமைய அடுத்துவரும் சாதாரணதர பரீட்சை உள்ளிட்ட பல பரீட்கைகளுக்கான திகதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டால், ஏனைய பரீட்சைகளுக்கான திட்டமிடல் முற்றிலும் ஒழுங்கற்றதாக மாறிவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.