முதலுதவி பயிற்சிகளை நிறைவு செய்த மீராபாலிகா மஹா வித்தியால மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவிப் பயிற்சிகளை பூர்த்திசெய்த காத்தான்குடி மட்/மம/மீராபாலிகா மஹா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (20) பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் அஷ்ஷேய்க் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.ஜவாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.எம்.ரமீஸ் மற்றும் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ரீ.எம்.எஸ்.அஹமட் , வலயக்கல்விப்பணிமனை திட்டமிடல் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜீ எம்.ஹக்கீம் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர்களோடு காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.பீ.ரத்னாயக்க , சென் ஜோன் அம்பியூலன்ஸ் ஆணையாளர் எஸ்.எல்.எச்.எம்.இனாமுல்லாஹ், காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்தியர் திருமதி அலீமா ரஹ்மான்,சென் ஜோன் அம்பியூலன்ஸ் உதவி மாவட்ட ஆணையாளர் என்.எம்.எம்.பாயிஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சென் ஜோன் அம்பியூலன்ஸ் முதலுதவி பயிற்சிகளை பூர்த்தி செய்த 180 மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(எம்.பஹத் ஜுனைட்)