சட்ட விரோதமாக மின்சார வேலியில் சிக்கூண்டு காட்டு யானை உயிரிழந்தது
புத்தளம்- மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாகும்புக்கடவல பிரதேசத்தின் பெத்திகம கிராமத்தில் ஒன்றரை ஏக்கரில் பயற்றைச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பெற்று பாதுகாப்பு வேலி அமைத்துள்ளார்.
இந்த விவசாயச் செய்கையை சாப்பிடுவதற்காக காட்டு யானைக் கூட்டம் ஒன்று நேற்று இரவு அக்காணியினுள் புகுந்து பயற்சைச் செய்கையை சாப்பிட்டு நாசம் செய்து விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் காட்டு யானை ஒன்று மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வனஜீவித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்துள்ள காட்டு யானை சுமார் 6 அடியைக் கொண்டதும் 20.முதல் 25 வயது மதிக்கதக்கது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்துள்ள யானையின் பிரேதப் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். இக்காணியின் உரிமையாளரை கைது செய்வதற்காக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளவும் வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(ஏ.என்.எம் முஸ்பிக்- புத்தளம்)