கோறளைப்பற்று மத்தியில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் தியாவட்டவான் கிராம உத்தியோகத்தர் பிரிவில் காணியற்றோர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (20) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரித்து வரும் மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தினால் அனுமதி பெற்று காணிக் கச்சேரிகளை நடாத்தி தெரிவு செய்யப்பட்ட 93 பயனாளிகளுக்கான முதலாம் கட்ட காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.றமீஸா, காணி வெளிக்கள போதனாசிரியர் சி.எம் எம். சமீம் மற்றும் காணிக் கிளை உத்தியோகத்தர்களான ஜி. சந்திரகாந்தன், எம்.எம்.அன்வர், ஜி. கமல்ராஜ், எம்.எஸ்.எப். றியாஸா, ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)