கற்பிட்டி ஜனாஸா சங்கத்தின் பிரதான காரியாலயம் திறந்து வைப்பு
கற்பிட்டியின் நீண்ட நாள் தேவையாக காணப்படும் ஜனாஸா வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான முதற்கட்ட வேலைத்திட்டத்தின் மூலம் கற்பிட்டியைச் சேர்ந்தவர்களின் நன்கொடைகள் கிடைக்கப்பெற்ற வண்ணம் உள்ளது.
மேற்படி வேலைத்திட்டத்தை இலகுபடுத்தும் நோக்கோடு செவ்வாய்க்கிழமை (19) இரவு கற்பிட்டி ஜனாஸா சங்கத்திற்கான பிரதான காரியாலயம் கற்பிட்டி பிரதான வீதியில் காட்டுபாவா சந்தியில் ஜனாஸா வாகனக் கொள்வனவு குழுவின் தலைவர் ஜே.எம் தாரிக் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
மஸ்ஜிதுல் புர்கான் (புதுப்பள்ளி) யின் பேஷ் இமாம் மௌலவி மிக்தாதின் துஆ பிரார்தனையுடன் இடம்பெற்ற பிரதான காரியாலய திறப்பு விழாவில் ஊரில் உள்ள சகலரும் கலந்து சிறப்பித்தனர் . தொடர்ந்து கருத்து தெரிவித்த தலைவர் மேற்படி ஜனாஸா வாகனக் கொள்வனவிற்கான பாரியளவு நன்கொடைகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன் சகல நிதிகளையும் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் பெற்றுக் கொள்வதற்கும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – றிஸ்வி ஹூசைன், புத்தளம் எம் யூ எம் சனூன்)