மாபெரும் அரபு எழுத்தணி போட்டி
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஊடாக அரபு தினத்தை முன்னிட்டு புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆண்கள் பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் அரபு எழுத்தணி போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
முதல் இடம் தொடக்கம் பத்து இடம் பெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்படும்.
Application Form மை இன்ஷாஅல்லாஹ் 21.11.2024 மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் (தக்யா பள்ளி) 09.12.2024 வரை பெற்றுக் கொள்ள முடியும்.
உங்கள் ஆக்கங்களை உங்களுடைய நிரப்பப்பட்ட Application Form வுடன் இணைத்து 10.12.2024 திகதிக்கு முன் அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் காரியாலயத்தில் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை ஒப்படைக்கப்பட வேண்டும்.
பிந்திய திகதிகளில் ஒப்படைத்தால் நிராகரிக்கப்படும்.
- புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆண்களும் பெண்களும் கலந்து கொள்ள முடியும்
- எழுத்தணி A3 பேப்பரில் அமைய பெற்றிருக்க வேண்டும்
- Application Form மை Photo Copy பண்ண முடியாது அவ்வாறு அடித்தால் நிராகரிக்கப்படும்
- ஒருவர் ஒரு எழுத்தணி போட்டியில் மாத்திரம் பங்கு பற்ற முடியும்
- Application Form ல் அ.இ.ஜ.உ. புத்தளம் நகரக் கிளையின் தலைவரின் ஒப்பத்துடன் இலக்கம் இட்டு வழங்கப்படும்
- Application Form ன் விலை 150/= ரூபா மாத்திரம்.
வயது 14 வயதுக்கு கீழ் உள்ள ஆண்கள் பெண்கள்
கனிஷ்ட பிரிவு
எழுத்தணி:
بسم الله الرحمن الرحيم
வயது 15 தொடக்கம் 35 வரை உள்ள ஆண்கள் பெண்கள்
சிரேஷ்ட பிரிவு
எழுத்தணி
لا اله الا الله محمد رسول الله
36 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் பெண்கள்
திறந்த பிரிவு
எழுத்தணி
لا حول ولا قوة الا بالله العلي العظيم
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம்
0755051051
0777249797
0786774616
ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை