உள்நாடு

மாவனல்லையில் மது,போதைப் பொருள் பயிற்சி செயலமர்வு..!

  இலங்கை ஜமாஅதே இஸ்லாமி  மாவனல்லை கிளையின் ஏற்பாட்டில் மது மற்றும்  போதைப்பொருள் தடுப்பு சம்பந்தமான பயிற்சி செயலமர்வு ஒன்று வலவ்வத்தை ஜமாஅதே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

ரம்யலங்கா மற்றும் ஹெல்த்தி லங்கா நிறுவனங்கள் இணைந்து நடத்திய முழு நாள் செயலமர்வில் போதைப் பொருள் தடுப்பு,மற்றும் பொறுப்புள்ள குடி மகனின் தலையீட்டின் அவசியம் குறித்து பல முக்கிய தலைப்புகளை உள்ளடக்கி நிகழ்ச்சிகள் நடைப்பெற்றதோடு, குழு கலந்துரையாடல் அமர்வுகளும் இடம் பெற்றன.

 ஹெல்த்தி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் திரு சமிக ஜயசிங்க அவர்கள் வழிகாட்டிய இந்நிகழ்வில் சமூக தலைவர்கள்,சமூகப்பணியாளர்கள்,தொழில் வல்லுனர்கள் என ஆண்களும் பெண்களுமாக பலர் கலந்துக் கொண்டு பயிற்சி பெற்றதோடு,பயிற்சி  பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.இதில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் உதவிப் பொதுச்செயலாளர் சட்டத்தரணி எம். எஸ். எம். தம்ஸீல்,மாவனல்லை கிளையின் இணைப்பாளர் எஸ். ஐ.எம். பஹ்மி,ரம்யலங்கா கேகாலை பிராந்திய பொறுப்பாளர் டாக்டர் அக்பர் அலி மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *