உள்நாடு

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையில் தீப்பற்றி எரிந்த விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடம்..!

உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலையின் இரண்டு மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடம் தீடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம்  கடந்த வெள்ளிக்கிழமையன்று (15) இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது 

உடனடியாக இதுபற்றி அறிந்த இப்பாடசாலை அதிபர் சரூக் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவர் சங்க குழுவினரும் பாடசாலை நலன்விரும்பிகள் எனப்பலரும் இப்பாடசாலைக்கு வருகைதந்து அக்கணமே மாத்தளை தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீ பரவாதிருக்க தீயையணைக்க பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளப்பட்டது இருந்தும்  இரவு 11.00 மணிவரையிலும் இத் தீ பரவிய நிலையில் காணப்பட்டது இக்கட்டிடத்திலிருந்த மாணவர்களுக்கான விஞ்ஞான பாட  கணனிகள் உட்பட இரசாயன பொருட்கள் என்பன தீயிக்கிரையானதாகவும் இக்கட்டிட மேல்மாடியுடன் அதன் கூரையும் முற்றாக தீயிக்கிரையானதால் சுமார் இரண்டு கோடிக்குமதிக  நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது 

இக்கட்டிடத்தின் மின்னொளியை வழங்கும் இணைப்புக்கம்பியில் ஏற்பட்ட மின்கசிவே இத்தீ ஏற்படக் காரணமெனவும் இதுகுறித்து மாத்தளை குற்றத் தடுப்பு பொலீஸ் அதிகாரிகள் மின்சாரசபை அதிகாரிகள் இது குறித்து மேலும் விசாரனைகளை நடாத்தினர் இத்தீவிபத்தால் எவருக்கும் பாதிப்புமேற்படவில்லைமெனவும்  தீயின் கருகிய வாடை பிரதேசமெங்கும் பரவியிருந்ததாகவூம் அறியமுடிந்தது

மகிந்த ராஜஷபக்ச ஆட்சியின்போது ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் உக்குவளை அஜ்மீர் தேசிய பாடசாலைக்கு  “மகிந்தோதய” இரண்டு மாடி வசதியுள்ள  கட்டிடங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தன 

(உக்குவளை நிருபர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *