விளையாட்டு

3ஆவதும் இறுதியுமான போட்டியில் நியூஸிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடுகிறது; இலங்கை அணியில் சிறாஸ்

இலங்கை அணிக்கு எதிரான 3ஆவதும் , இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வென்று தொடரை 2:0 என வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் 3ஆவதும் இறுதியுமான போட்டி இன்று (19) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது.

இப்போட்டியில் இலங்கை அணி 5 மாற்றங்களைச் செய்து களம் காண்கின்றது. ஆரம்ப வீரரான பெத்தும் நிஷங்கவுக்கு பதிலான நிஷான் மதுஷ்கவும், குசல் மென்டிஸிற்கு பதிலாக நுவணிந்து பெர்ணான்டோவும், துனித் வெல்லாலகேவிற்கு பதில் அறிமுக வீரரான சமிந்து விக்ரமசிங்கவும், அஷிதவிற்கு பதில் டில்ஷான் மதுஷங்கவும், கமிந்து மென்டிஸிற்கு பதிலாக முஹம்மது சிறாஸ் உம் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை நியூஸிலாந்து அணி சார்பில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன்இப்போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி கொண்ட நியூஸிலாந்து அணியின் தலைவரான மிச்சர் சாண்ட்னர் முதலில் துடுப்பெடுத்தாடப் போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *