கேரள கஞ்சாவுடன் நபரொருவர் ஹபரணையில் கைது
ஹபரணை பொலிஸ் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் இப்பாகமுவ பகுதியில் வசித்து வரும் 50 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 02 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹபரணை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)