புதிய அமைச்சர்கள் விபரம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, பிரதமராக ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
கலாநிதி ஹரினி அமரசூரிய – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஜித ஹேரத் – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சரோஜா சாவித்திரி போல்ராஜ்- பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.