உள்நாடு

இலங்கையைச் சேர்ந்த ஆறு பேர் மலேசியாவில் கலாநிதி பட்டம் பெற்றனர்! ஒருவர் சிறந்த மாணவராகத் தெரிவு.

மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் 40 வது பட்டமளிப்பு விழாவின் ஒரு பகுதி நேற்று நிறைவுபெற்றது. (16.11.2024). இந்த பட்டமளிப்பு விழாவின் போது இலங்கை சேர்ந்த ஆறு பேர் கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.

கலாநிதி. அரபாத் கரீம் – பேருவளை
கலாநிதி. அஸ்லம் – தெல்தோட்டை
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் – புத்தளம்
கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் – புல்மோட்டை
கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் – கொழும்பு
கலாநிதி. ஸப்ரீனா – ஏறாவூர்

கலாநிதி. அரபாத் கரீம் பிக்ஹ் மற்றும் உஸுலுல் பிக்ஹ் துறையிலும்
கலாநிதி. அஸ்லம் ரிஸா சமூகவியல் மற்றும் மானிடவியல் துறையிலும்
கலாநிதி. ஆஸாத் ஸிராஸ் உஸுலுத்தீன் மற்றும் மத ஒப்பீட்டாய்வு துறையிலும், கலாநிதி. மொஹமட் அப்துல்லாஹ் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் துறையிலும், கலாநிதி. இம்தியாஸ் நூர்டீன் வியாபார நிருவாகவியல் துறையிலும், கலாநிதி. ஸப்ரீனா கல்வித் துறையிலும் தமது கலாநிதி பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

மேலும் கலாநிதி ஆஸாத் ஸிராஸ் மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் Faculty of Islamic Revealed Knowledge and Human Sciences இனால் சிறந்த மாணவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப் பட்டமையும் விஷேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *