ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள்.தந்தை பலி.மகன் காயம்
அனுராதபுரம் – ஹபரணை பெல்லங்கடவல பகுதியில் உள்ள ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்கு குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அனுராதபுரம் கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மகன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
