புத்தளம் மாவட்டத்திலிருந்து சிறுபான்மை பிரதிநிதியாக ஆளுந்தரப்பில் பைசல் தெரிவு.
பத்தாவது பாராளுமன்றத்திற்கு புத்தளம் மாவட்டத்திற்கான சிறுபான்மை பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தியில் இம்முறை முதன்முறையாக போட்டியிட்ட எம்.ஜே.எம் பைசல் 42 939 விருப்பு வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் இருந்து எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இம்முறை 24 அரியல் கட்சிகள் மற்றும்+15 சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 429 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் . அத்தோடு புத்தளம் மாவட்டத்தில் 663 673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி 239 576 வாக்குகளை பெற்று ஆறு ஆசனங்களை பெற்றது. இது 63. 10 சதவீதம். அத்தோடு ஐக்கிய மக்கள் சக்தி 65 679 வாக்குகளை பெற்று இரண்டு ஆசனங்களை பெற்றது. இது 17 30 சதவீதமாகும்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)