பட்டங்களால் மின்சார உற்பத்தி; நுவரெலியாவில் ஆரம்பம்
பட்டங்களை பறக்கவிட்டு வீட்டுப் பாவனைக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டமொன்று நுவரெலியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆதர் சி கிளார்க் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன மற்றும் இலங்கை பௌதீகவியல் நிறுவகத்தின் தலைவர் கலாநிதி சிந்தக டி சில்வா ஆகியோர் நுவரெலியா வில் மேற்கொண்ட பரிசோதனையின் பலனாக, பட்டங்களை பறக்கவிட்டு உள்ளக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஆதர் சி கிளார்க் நிலையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,
பட்டங்கள் பறக்கவிட்டு ஆற்றலை உற்பத்தி செய்வது வழமையான விடயம், ஆனால் அதனையும் தாண்டி நுவரெலியாவில் இருந்து பட்டங்களைப் பறக்கவிட்டு சக்தியை உற்பத்தி செய்யும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம்.
இலங்கைக்கு இது ஒரு புதிய விடயமாக இருந்தாலும், அமெரிக்கா போன்ற பலம் வாய்ந்த நாடுகளில் ஒரு பட்டம் ஏற்கனவே ஐந்து வீடுகளுக்கு மின்சாரத்தை வழங்குகிறது.
என்றார்.
(ரஷீத் எம். றியாழ்)