தோட்டத் தொழிலாளர்மீது குளவி கொட்டு; ஒருவர் பலி
புஸ்ஸல்லாவ – மெல்பத்வத்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (12) மாலை குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு பேர் காயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மெல்பத்வத்த, புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடையவராவார்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனைய நால்வரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் .
(ரஷீத் எம். றியாழ்)