கண்டி மாவட்டம் பொதுத் தேர்தலுக்கு தயார்
கண்டி மாவட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன.
கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 11 இலட்சத்து 91 ஆயிரத்து 399 வாக்காளர்கள் இவ்வருடம் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
22 பிரதான கட்சிகள் மற்றும் 12 சுயேட்சைக் குழுக்களைச் சேர்ந்த 510 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 890 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறும் என கண்டி மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி சந்தன தென்னகோன் தெரிவித்தார்.
தேர்தல் கடமைகளுக்காக 15,000 அரச அதிகாரிகளும் 1,000 பொலிஸ் அதிகாரிகளும் மற்றும் 300 விசேட அதிரடிப்படை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொல்கொல்ல கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனம், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகம், தேசிய இளைஞர் சேவை மன்ற தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிலையம் மற்றும் மகாவலி தேசிய கல்வி பீடம் ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்படும்.
இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் பதிவான தபால் வாக்குகளின் எண்ணிக்கை 57,951 ஆகும். தபால் வாக்குகளை எண்ணும் பணி பொல்கொல்ல மாதிரி பாடசாலையில் இடம்பெறவுள்ளது.
(ரஷீத் எம். றியாழ்)