உள்நாடு

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் கவிதைப் போட்டி பரிசளிப்பு வைபவம்

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றம் தமது புலனம் (வட்சப்) குழுமத்தின் ஊடாக நடாத்திய கவிதை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) மாலை மன்றத்தின் தலைமையகத்தில் அதன் தலைவர் எஸ். எம் அரூஸ் தலைமையில் இடம்பெற்றது.

சுய பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட பரிசளிப்பு நிகழ்வு உப தலைவர் எம் எம் எம் நவ்பின் வரவேற்புடன் தலைவர் எஸ் எம் அரூஸின் கருத்துரையுடன் சிறப்பாக இடம்பெற்றது. அத்தோடு செவிக்கு விருந்தாக அங்கத்தவர் எம். நாசரின் பாடல் மற்றும் பொருளாளர் ஏ.எச்.எப் பர்வினின் கவி வரிகள் மேலும் நிகழ்வை மெருகூட்டியது. மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சுப்ரமணியம் ஆசிரியரின் சிறப்புரையும் இடம்பெற்றது.

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் புலனம் (வட்சப்) குழுமத்தில் கண்ணீர் எனும் தலைப்பில் இடம்பெற்ற கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தை ரமீனா ரபீக் பெற்றுக் கொண்டார். இரண்டாம் இடத்தை ஏ.எச். எப். பர்வின், மூன்றாம் இடத்தை எஸ். சுப்ரமணியம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர் இவர்களுக்கான நினைவுச்சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படதுடன், கவிதை போட்டியில் பங்குபற்றிய ஏனையவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், கண்ணீர் தலைப்பில் சிந்திய துளிகள் எனும் போட்டிக் கவிதைகளின் தொகுப்பும் மன்றத்தின் செயலாளர் எம். எச். எம். சியாஜ் முயற்சியால் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான நினைவு சின்னம் மற்றும் சான்றிதழ்கள் அனுசரணையை றிஸ்டா குளிர்பானங்களின் கற்பிட்டி பிரதேச விநியோகஸ்தர் எம்.எப்.எம். றில்மியாஸ் வழங்கி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *