உள்நாடு

ஹெரேய்ன் போதைப் பொருளுடன் சட்டத்தரணி கைது

னுராதபுரம் தலைமையக பொலிஸ் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சட்டத்தரணி ஒருவரை (11) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் தலைமையக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம் நீதிமன்றில் கடமையாற்றும் 42 வயதுடைய சட்டத்தரணியாவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர் என பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த நபரிடமிருந்து 02 கிலோ 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *