“சமூக விழிப்புணர்ச்சிக்காக தோழமையுடன் பங்காற்றியவர் வஹாப் மாஸ்டர்”;முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க
முஸ்லிம் சமூக விழிப்புணர்ச்சிக்காக. தோழமையுடன் பங்காற்றிய சமூக சேவையாளர் வஹாப் மாஸ்டரின் இழப்பு சமூக நலன் நாடும் மக்களுக்கே ஒரு பேரிழப்பாகும் என்று முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சரும் வடமத்திய மாகாண முன்னாள் ஆளுநருமான சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
நேற்று(11) காலஞ்சென்ற அக்குறணையின் முன்னாள் பிரதேச சபையின் உப தலைவரும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான எம்.ஏ வஹாப்தீனின் மரணம் குறித்து தெரிவித்துள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
ஆசிரியராகவும் மஸ்ஜித் தர்மகர்த்தாவாகவும் பிரதேச சபை உறுப்பினராகவும் உப தலைவராகவும் கட்சி அமைப்பாளராகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியன.
முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் சமூக முன்னேற்றத்துக்காகவும் மத்திய மாகாண சபையூடாகவும் பிரதேச சபையூடாகவும் பல்வேறு சேவைகளை ஆற்றிய ஒருவரை நாம் இழந்துள்ளோம்.
இன மத வேறுபாடின்றி சகலருடனும் இணக்கமாகவும் ஐக்கியமாகவும் பழகக்கூடிய ஒரு மாமனிதரின் இழப்புக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை மர்ஹூம் வஹாப் மாஸ்டரின் ஜனாஸா இல்லத்துக்கு விஜயம் செய்த பின்னர் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க இந்த அனுதாபச் செய்தியை தேரிவித்துள்ளார்.
(ரஷீத் எம். றியாழ்)