ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கை இடுதல் பற்றிய செயலமர்வு
இலங்கை பத்திரிகை ஸ்தாபானம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர்களுக்கான பொறுப்புடனும் பொறுப்பு கூறலுடனும் தேரதல் விடயங்களை அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு சனிக்கிழமை (09) கல்லடி கிறீன் கார்டனில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில் பிரதான வளவாளராக சட்டத்தரணியும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் வளவாளருமான திரு ஐங்கரன் குகதாசன் தேர்தல்களின் போது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் ஊடகங்களின் பங்கு எனும் தலைப்பிலும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஆராய்ச்சியாளரான திரு எம்.என்.ராஜா ஜனாதிபதித் தேர்தல் 2024க்கான இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஊடக அவதானிப்புகளின் ஆய்வறிக்கை தொடர்பிலும் விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி..எம்.பைறூஸ் தேர்தல்களின் போது நெறிமுறைகளை உறுதி செய்வதில் உண்மைத்தன்மைகளை சரிபார்த்தல் எனும் தலைப்பிலும் ஊடகவியலாளர்கள் தத்தமது கடமைகளை சரிவர செய்து பொறுப்புடனும் ஆதாரமற்ற மற்றும் பொய் பிரசாரங்களில் இருந்து தவிர்ந்து தத்தமது கடமைகளை சரிவர முன்னெடுக்க வேண்டும் என விரிவுரைகளில் வலியுறத்தப்பட்டது.
இதில் அம்பாரை,மட்டக்களப்பு மாவட்ட ஆண்,பெண் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
( நிஸா இஸ்மாயீல் )