அக்குறணையின் பிரபல சமூக சேவையாளர் வஹாப் மாஸ்டர் காலமானார்
அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் உப தலைவரும். பிரபல சமூக சேவையாளருமான வஹாப் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எ.எம்.ஏ வஹாப்தீன் மாஸ்டர் (வயது78) நேற்று (11) காலமானார்.
1968 ஆம் ஆண்டு தொடக்கம் அக்குறணை பிரதேச சபையில் உறுப்பினராகவும் உப தலைவராகவும் சேவையாற்றிய இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரசித்தி பெற்ற உடற்பயிற்சி ஆசிரியரான வஹாப் மாஸ்டர் அக்குறணை, சம்மாந்துறை, கஹட்டகஸ்திகிலிய , வரக்காமுற, கலேவெல முதலான பல இடங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அக்குறணைஅஸ்னா பள்ளித் தலைவர், அஸ்னா நியாய சபைக் குழு பொறுப்பாளர், அஸ்னா பள்ளி கல்விக்குழுத் தலைவர். கண்டி மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளனத்தின் செயற் குழு உறுப்பினர், தெழும்புகஹ வத்த ஜும்ஆப் பள்ளி உறுப்பினர் போன்ற முக்கியமான பதவிகளை வகித்து வந்தவர்.
அக்குறணை உட்பட கண்டி மாவட்டத்தின் சமூக அமைப்புக்களோடு சேர்ந்து இவர் அரும்பணிகள் பலவற்றில் பங்களிப்புச் செயதவர்.
இவருடைய மகள் ஷமா முயிஸ் பலஸ்தீனத்தில் நடக்கும் அடக்கு முறைகளுக்கு எதிராக ஜெனீவாவில் குரல் கொடுத் தவர். பலஸ்தீனத்தில் இஸ்ரவேலின் மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது மனித உரிமை மாநாட்டில் சிறுவர் பெண்கள் உரிமை பற்றி உரையாற்றியவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை அக்குறணையில் நடைபெறவுள்ளது.
(ரஷீத் எம். றியாழ்)