உள்நாடு

புலமை பரிசில் பரீட்சை இல்லை, முன்பள்ளி கல்வி திட்டம் அரசால்முழுமையாக சுவீகரிக்கப்படும்;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு

தரம் ஐந்து புலமைப் பரிசில்
பரீட்சை இரத்து செய்யப்படும்
என பிரதமரும் கல்வி
அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார்.

இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது.

முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன்
இப் பிரிவு உட்பட ஆரம்பக்
கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்
கீழ் வழி நடத்தப்படவுள்ளது.

இப்பிரிவுக்கான ஆசிரியர்கள்
அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை
இவர்கள் பட்டதாரிகளாக
ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம்
எனவும் தெரிவித்த பிரதமர்
மேற்படி மாற்றங்கள்
உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு
அமைய இடம் பெறும்
எனவும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *