உள்நாடு

எரிபொருள், மின் கட்டணங்களை குறைப்போம்; ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு

மின் கட்டணத்தையும், எரிபொருள் விலையையும் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.அதற்காக சிறிது கால அவகாசம் தேவை என ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தம்புள்ளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் மின்சாரத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் ஏறத்தாழ 30 சத வீதத்தால் மின் கட்டணங்களைக் குறைப்போம்.

எரிபொருள் விலையையும் குறைக்க முடியும். என்றாலும் இவற்றுக்காக மக்கள் எமக்கு சிறிது கால அவகாசம் தர வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *