விளையாட்டு

லெஜெண்ட்ஸ் உள்ளக உதைப்பந்தாட்டம்;சம்பியன் மகுடம் வென்றது கல்பிட்டி பனாக்கோ எப்.சி

புத்தளம் லெஜெண்ட்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் அணிக்கு ஆறு பேர் கொண்ட உள்ளக உதைபந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் எம்.எஸ்.கே அணியை 3:1 என வீழ்த்தி சம்பியனானது கல்பிட்டி பனாக்கோ எஃப். சி அணி.

நேற்றைய தினம் (9) புத்தளம் முபா உள்ளக உதைப்பந்தாட்ட மைதானத்தில் புத்தளம் லெஜெண்ட்ஸ் கழகம் ஏற்பாடு செய்திருந்த அணிக்கு 6 வீரர்கள் கொண்ட உள்ளக உதைப்பந்தாட்ட தொடரில் 24 அணிகள் பங்கேற்றிருந்தன.

விலகல் முறையில் இடம்பெற்ற இத் தொடரில் முதல் மற்றும் 2ஆவது சுற்றுக்கள் காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் முடிவில் எந்தவித தோல்விகளையும் சந்திக்காத கல்பிட்டி பனாக்கோ எப்.சி மற்றும் புத்தளம் எம்.எஸ்.கே ஆகிய அணிகள் தீர்மானிக்க இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

அதற்கமைய இடம்பெற்ற சம்பியனை தீர்மானிக்கும் இறுதிப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் ஆரம்பம் முதல் விறுவிறுப்பை ஏற்பட்த்தியது. இதில் ரிஜ்வான் கல்பிட்டி பனாக்கோ அணிக்கான முதல் கோலை அடிக்க 1:0 என முன்னலை பெற்றது பனாக்கோ எப்.சி அணி. பின்னர் சற்று நேரத்தில் புத்தளம் எம்.எஸ்.கே அணி பதில் கோலை செலுத்த முதல் பாதி ஆட்டம் 1:1 என சமனிலை பெற்றது.

பின்னர் தொடர்ந்து இடம்பெற்ற 2ஆவது பாதி ஆட்டத்தில் பனாக்கே அணி வீரர்களின் வேகமான ஆட்டத்தால் நஸ்ரான் மற்றும் அஹதிர் ஆகியோரினால் அடுத்தடுத்து கோல்கள் உள்ளனுப்பப்பட 3:1 என முன்னிலையை உறுதி செய்தது பனாக்கோ எப்.சி அணி. தொடர்ந்த ஆட்டத்தில் எம்.எஸ்.கே அணியால் பதில் கோலை உள்ளனுப்ப முடியாமல் போக ஆட்ட நேர முடிவில் 3:1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கல்பிட்டி பனாக்கோ எப்.சி அணி சம்பியன் பட்டத்தை வெற்றி கொண்டது.

மேலும் இத் தொடரின் சிறந்த வீரராக பனாக்கோ அணியின் அஹதிரும், சிறந்த கோல்காப்பாளராக பனாக்கோ அணியின் பர்ஹானும் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *