கடும் மழை காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்க வான் கதவுகள் திறப்பு
கடும் மழை காரணமாக இராஞாங்கனை நீர்த்தேக்கத்தின் அவசர வான் கதவுகள் (08) இரவு 09.00 மணியளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியாளர் அலுவலகம் தெரிவித்தது.
அதனூடாக வினாடிக்கு 1.150 கண அடி நீர் கலாஒயா வுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது.
மழையுடன் இராஞாங்கானை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் 33 அடியை தாண்டியுள்ளது.
இதனால் 2 அவசர வான் கதவுகள் 2 அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளதாக இராஜாங்கனை நீர்த்தேக்க நீர்ப்பாசன பொறியாளர் அலுவலகம் தெரிவித்தது.
(எம்.ரீ.ஆரிப்- அநுராதபுரம்)