பலா மரத்திலிருந்து விழுந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணம்
பலாப்பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறி கீழே விழுந்த14 வயது மாணவன் சுமார் இரண்டு மாத கால சிகிச்சை பலனளிக்காமையால் மரணத்தைத் தழுவியுள்ளார்.
மொரகொல்லாகம கடவல வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் நிசல் நிம்சர பத்திரத்ன என்ற மாணவனே இவ்வாறு மரணித்தவராவார்.
இவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த மாணவனின் தாயார் வீட்டுப் பணியாளராக வெளிநாடு சென்றுள்ளார் என்றும் இந்த மாணவன் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
(ரஷீத் எம். றியாழ்)