உள்நாடு

பொருட்களின் விலை குறைக்கப்படாமை குறித்து மக்களால் முறைப்பாடுகள்

உணவு உற்பத்திகளின் விலை குறைப்பு வீதம் தொடர்பில் பொதுமக்களால் நுகர்வோர் விவகார அதிகார சபையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமையின் பலன் மற்றும் மூலப்பொருட்களின் விலை குறைப்பின் பலன் என்பனவற்றை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பேக்கரி மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கின்றார்களா? என்பதை ஆராய்வதற்கும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு இணையாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினரையும் ஹோட்டல் உரிமையாளர்களின் சங்கத்தினரையும் அழைத்து விலை குறைப்பு தொடர்பில் கலந்துரையாட திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

நூட்டின் பொருளாதார ஸ்தரத் தன்மைகள் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகள் வகை தொகையின்றி அதிகரித்தமையால் சாதாரணதர மக்கள் பெருமளவில் கஸ்டங்களை எதிர் கொண்டுள்ளனர். இன்று வரை விலைக்குறைப்புகள் மக்கள் எதிர்பார்த்தளவு குறைவடையவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறுவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை பெற்றோர் வழங்க முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன.

இந்தவகையில் அரசாங்கம் உடநடியாக பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்தால் சாதாரணதர மற்றும் கீழ் மட்ட வருமாணம் பெறும் மக்கள் ஓரளவு நன்மையடைய வாய்ப்புக்கள் ஏற்படும்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *