கண்டி மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் பாதுக்கப்பட வேண்டும், இது மாவட்ட முஸ்லிம்களின் கடமை; மாவட்ட அரசியல் மன்றத்தின் தலைவர் வஸீர் முக்தார் வேண்டுகோள்
கண்டி மாவட்ட முஸ்லிம் பிரதிநித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் நான்கு பிரதிநிதித்துவம் உள்ள மாவட்டத்தில் தற்போது இரண்டு பிரதிநிநித்துவங்களே உள்ளன. இப்பிரதிநித்துவங்களைப் பாதுகாப்;பது இன்றைய முஸ்லிம் சமூகத்தின் கட்டாயப் பொறுப்பாக அமையும் என்று யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், கண்டி மாவட்ட சுதந்திர அரசியல் மன்றத்தின் தலைவர் வஸீர் முக்தார் தெரிவித்தார்.
கண்டி மாவட்ட சுதந்திர அரசியல் மன்றத்தின் ஏற்பாட்டில் “அரசியல்வாதியின் வகிபாகமும் பொறுப்புக் கூறக் கூடிய குடி மகனும்” என்ற தொனிப் பொருளிலான செயலமர்வு கண்டி ஓக்ரோ ஹோட்டலில் தேசிய வளர்ச்சியின் தலைவரும், அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின முன்னாள்; தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி மற்றும் தொழிலதிபர் ஏ. டப்லியூ ஏ. ரஸீட் ஆகிய இருவரின் நெறிப்படுத்தலுடன்; முன்னாள் யட்டிநுவர பிரதேச சபையின் உறுப்பினர் வஸீர் முக்தார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இம்முறை கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்பாளராக போட்டியிடக் கூடிய ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரின் தேசியத்; தலைவர் ரவூப் ஹக்கீம், எம். எச். ஏ. ஹலீம், திஸ்ஸ அத்தநாயக்க, சன்ன கலபதிகே சாமின் திருனி கிரியெல்ல, பாரத் அருள்சாமி சாமி , பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் உபுல் பண்டார திசாநாயக, சப்ரகமுவ பல்கலைக்கழகப் பேராசிரியர் முஹமட் அஸ்லம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தலைமையுரை நிகழ்த்திய யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் வஸீர் முக்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, கடந்த காலத்தில் கண்டி மாவட்டத்தின் பாராளுமன்றத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவம் நான்கு பேர் இருந்துள்ளனர். அது தற்போது குறைவடைந்து இரண்டு என்ற நிலையின் கீழ் வந்துள்ளது. இந்த நான்கு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை பெற்றுக் கொள்வதற்கு எமது சமூகம் மிக சாதுரியமாக கடந்த காலங்களில் நடந்து கொண்டார்கள் என்பது ஒரு வரலாறு.
ஆனால் இன்றைய சூழ் நிலைமையில் அன்று காணப்பட்ட இருமுனை போட்டி அல்ல இன்று காணப்படுவது. நான்கு பிரதான கட்சிகளும் ஒரு சுயேச்சை குழு என்ற அடிப்படையில் ஐமுனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது ஒரு துரதிருஷ்டமான சம்பவமாகும்.
எனவே இன்றைய காலகட்டத்தில் மிகவும் தூர நோக்கத்துடன் ஆழ்ந்த சிந்தனையுடன் எமது வாக்குகள் சிதறடிக்கப்படாமல் நாங்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கும் எமது கண்டி மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநித்துவம் மிக மிக அவசியமாகும். இன்றைய அரசியல் மாற்றத்தின் ஊடாக எமது முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து ஏற்படுமாயின் பாராளுமன்றத்தில் ஒரு அபாயகரமான சந்தர்ப்பத்தை உருவாக்கி விடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. எனவே நாங்கள் கண்டியில் தொடர்ந்து ஓர் ஆரோக்கியமான அரசியல் சூழலை வைத்துக் கொள்வதற்கு அனுபவமும்; அறிவும் சார்ந்த முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு கண்டி வாழ் முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய பெறுமதியான வாக்;குகளை அளிக்க வேண்டும்.
அதிலும் விசேடமாக பல கட்சிகளுக்கு தங்களுடைய வாக்குகளை அளித்து வீணாக்கி விடாமல் நிதானமாகவும் புத்திசாதூரியத்துடனும் சிந்தித்து வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் எம். எச். ஏ. ஹலீம் ஆகிய இவருவருக்கும் தங்களுடைய வாக்கினை அளிக்க வேண்டும் என்று மிகவும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)