கண்டியில் கடும் மழை.அக்குறணை வீதியும் நீரில் மூழ்கியது.
இன்று( 08 ஆம் திகதி) பிற்பகல் முதல் கண்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிது.
இதனால் கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் உள்ள அக்குறணை நகரத்தில் மீண்டும் வெள்ள நிலை காணப்பட்டது.
அக்குறணை நகரின் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியதால் கண்டி – யாழ்ப்பாணம் ஏ 9 வீதியின் போக்குவரத்து சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு தடைப்பட்டிருந்தது.
கண்டியை அண்மித்த பேராதனை மடவளை அம்பிட்டிய தலாத்துஒய உடுநுவர முதலான பல இடங்களிலும் கடும் மழை பெய்தது.
(ரஷீத் எம். றியாழ்)