வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸ் நியமனம்
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜனவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை ட்ரம்ப் நியமித்துள்ளமை உலக அளவில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார்.
சூசி வைல்ஸை பற்றி ட்ரம்ப் “சூசி புத்திசாலி. புதுமை விரும்பி, உலகளவில் மதிக்கப்படுகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில் அவர் அயராது பாடுபடுவார், அதற்கான உழைப்பை கொடுப்பார் என நம்புகிறேன். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக இருக்க சூசி தகுதியானவர்” என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் 32-வது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.