உள்நாடு

நான் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவன் என்பதை சர்வஜன பலய கட்சித் தலைவர் திலித் ஜயவீர நிரூபித்தால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்.அவ்வாறு நிரூபிக்கத் தவறினால் அவர் அரசியலிலிருந்து அவர் ஒதுங்க வேண்டும்

எனது இரட்டைப் பிரஜாவுரிமையை நிரூபித்தால்  நாளையே அரசியலில்  இருந்து விடைபெறுவேன்.நான் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் எனத் தெரிவிக்கும் சர்வஜன பலய கட்சியின் தலைவர் இதனை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவர் அரசியலில் இருந்து விடைபெறல் வேண்டும் என களுத்துறை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் திலகரட்ன தில்சான் தெரிவித்துள்ளார்.

      எதிவரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் களுத்துறை மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப்  போட்டியிடும் இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரான திலகரட்ன தில்சான் களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-

நான் இரட்டை பிரசாவுரிமை கொண்டவர் என சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர கடந்த நாட்களில் தெரிவித்திருந்தார்.இதனை அவர் நிரூபிக்கும் பட்சத்தில் தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அவ்வாறு நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறல் வேண்டும்.இவரது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு வந்தது.முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஊடாக அந்த அழைப்பை விடுத்தது எனது இரட்டை பிரஜாவுரிமை பற்றித் தெரியாமலா எனவும் தெரிவித்தார்.

   புதிய  அரசியல் கலாசாரத்தில் பயணிக்கும் புதிய கட்சியொன்று இவ்வாறு கீழ் மட்டத்துக்கு செல்லக் கூடாது.பழைய  அரசியல் கலாசார முறைக்கேற்ப ஏன் இப்படியாக செயல்படுகின்றனர்.நாம் புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.ஜனாதிபதி வேட்பாளர் ஒருவராக இவ்வாறான பொய் தெரிவிப்பது தகுதியானதாக இல்லை.நான் நிலைகொண்ட இடத்தில் சாதாரணத்தை செய்ய முடியும்.ஊழல், மோசடி மற்றும் களவு இல்லாத இடமாகும்.பதினைந்து முன் பள்ளிகளை நடத்தி வருகிறைன்.பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காக நிதியுதவி வழங்கி வருகிறேன்.கிராமிய மக்களின் வீட்டு நிர்மாணத்துக்கு உதவியுள்ளோம்.இதனால்தான் களுத்துறை மாவட்ட மக்கள் என்னுடன் ஒன்றிணைந்துள்ளனர்.

     தேசிய கிரிக்கட் துறையில் தேசத்துக்கு  வளமொன்றாக விளங்கிய எனக்குப்  பயந்து அரசியல் பிரபலங்கள்  எனக்கு சேறு பூசுகின்றன.சேறு பூசி என்னை தடுத்துவிட முடியாது.மக்களுக்கா எனது சேவைகளை நிறுத்தவும் மாட்டேன் எனவும் திலகரட்ன தில்சான் மேலும் தெரிவித்தார்.

    (எம்.எஸ்.எம்.முன்தஸிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *