நியூஸிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கையில் ரி20 மற்றும் ஒருநாள் குழாம் அறிவிப்பு
சுற்றுலா நியூஸிலாந்து அணிக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான சரித் அசலங்க தலைமையிலான 17 வீரர்கள் கொண்ட இலங்கைக் குழாம் இன்று (6) இலங்கை கிரிக்கெட் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் இரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது. மேலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி அதே தம்புள்ள மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.
மேலும் ஒருநாள் தொடரின் இறுதி இரு போட்டிகளும் எதிர்வரும் 17ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் பகலிரவுப் போட்டியாக கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. அந்தவகையில் இத் தொடரில் பங்கேற்கின்ற நியூஸிலாந்துக் குழாம் நேற்று முன்தினம் இலங்கை வந்து பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.
அதற்கமைய இவ்விரு தொடர்களுக்கான இலங்கை குழாம் இலங்கை கிரிக்கெட் சபையின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் இரு அணிகளின் தலைவராக சரித் அசலங்க தொடர்ந்தும் செயற்படவுள்ளார். அதற்கமைய அறிவிக்கப்பட்டுள்ள அணிகளில் ஒருநாள் அணியில் துடுப்பாட்ட Pரர்களான அவிஷ்க பெர்னான்டோ, பெத்தும் நிஷங்க, குசல் பெரேரா மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்ரமநிஷான் மதுஷ்க ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர். மேலும் சகலதுறை வீரர்களாக கமிந்து மென்டிஸ், வனிந்து ஹசரங்க மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சுழல்பந்துவீச்சில் மகேஷ் தீக்சன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோருடன், வேகப்பந்து வீச்சாளர்களாக சமிந்து , அஷித, மதுஷங்க மற்றும் முஹமட் சிறாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
மேலும் 2 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இலங்கை குழாத்தில் ஒருநாள் அணியில் இடம்பெற்ற சதீர மற்றும் நிஷான் மதுஷ்க நீக்கப்பட்டு சந்திமால் மற்றும் பானுக ராஜபக்ச ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களில் டில்ஷான் மதுஷங்க மற்றும் முஹம்மட் சிறாஷ் ஆகியோர் நீக்கப்பட்டு மதீச பத்திரன மற்றும் நுவான் துஷார ஆகியோர் உள்ளவாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)