நிந்தவூரில் நடைபெற்ற PCA அமைப்பின் சமாதான, சமூக ஒற்றுமைக்கான கூட்டம்
அண்மையில் நிந்தவூர் தோப்பு ரேஸ்டோரண்டில், நிந்தவூர் PCA அமைப்பின் (Peace and Community Action) Step 3 திட்டத்தின் கீழ் சமாதானம் மற்றும் சமூக ஒற்றுமையை கட்டியெழுப்பும் முக்கிய கூட்டம் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் மூலமாக பிரதேச செயலக மட்டத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் குழுக்களை உருவாக்குவதும், குறித்த குழுக்கள் ஊடாக கிராம மட்டத்தில் உள்ள மக்கள் தாமாகவே முரண்பாடுகள் மற்றும் சிக்கல்களை சிறந்த முறையில் தீர்த்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, ஒருமைப்பாடு, சமத்துவம், மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்க செயல்படுகின்றது.
இதன் மூலம் சமூகத்தில் ஒற்றுமையை நிலைநிறுத்தும் ஒரு நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு PCA அமைப்பு செயற்படுவதாக அமையும்.
குறித்த நிகழ்வில் PCA அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஏ. ராஜேந்திரன், திட்ட அலுவலர் இஸ்ரத் அலி உள்ளிட்ட பல முக்கிய ஆளுமைகள் கலந்துகொண்டனர். மேலும், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் PCA அமைப்பின் உறுப்பினர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கூட்டத்தின் போது, நிந்தவூர் பிரதேச சமூக ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் எம். எம். சமீர் அவர்கள், வளவாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இத்தகைய சந்திப்புகள், நிந்தவூரில் வாழும் பல்லின மக்கள் ஒருமைப்பாட்டில் இணைந்து செயல்படுவதற்கான சீரிய முயற்சிகளை வளர்க்கும் என நம்பப்படுகிறது.
(எம்.ஏ.எம் முர்ஷித்)