ஏட்டுலா கனவாக்க அமைப்பின் இரண்டாவது புத்தக வெளியீடு!
சிந்தனைத் திறன்மிக்க எழுத்தாளர்களின் எழுத்துக்களை புத்தக வடிவாக்கி அவர்களின் புத்தகக் கனவை நனவாக்கும் அமைப்பான ஏட்டுலா கனவாக்கம் தனது இரண்டாவது நூலாக, கண்டி/தெல்தோட்டை இளம் எழுத்தாளர் திக்ரா ஹனீபா அவர்கள் எழுதிய வாப்பாக்கு எனும் நூலை (03.11.2024) காலை 9.00 மணியளவில் கண்டி/தெல்தோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் ஏட்டுலா கனவாக்கம் அமைப்பின் கீழான நிகழ்ச்சி ஏற்பாட்டில் வெளியீடு செய்தது.
இந் நிகழ்விற்கு ஏட்டுலா கனவாக்கத்தின் நிர்வாக உறுப்பினரும் ஜே.எம்.ஐ நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜே.எம்.ஐ இஹ்சான் அவர்கள் தலைமை தாங்கியதுடன், பிரதம அதிதியாக கலாநிதி. அஷ் ஷெய்க் முனீர் சாதிக் (காஷிபி)
தலைவர் – தெல்தோட்டை பள்ளிவாசல்கள் சம்மேளனம் உபதலைவர்களில் ஒருவர்,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா- தெல்தோட்டை கிளை, அகில இலங்கை சமாதான நீதவான் அவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வு செல்வன் எம்.ஏ.எம் ஷாபிக்கின் கிராஅத்துடன் ஆரம்பமானதைத் தொடர்ந்து ஏட்டுலா கனவாக்க நிர்வாக உறுப்பினர் ஜே.எம்.ஐ இஹ்சானினால் தலைமையுரையும்,வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது.
அதனையடுத்து ( இலக்கிய ஒளித்தாரகை) கவிக்குயில் ஷியாஸ்னா பைஸலின் வாழ்த்துப்பாவும், ஏட்டுலா கனவாக்கத்தின் முதலாவது புத்தக வெளியீடான நிதர்சனத்தின் நிழல் நூலாசிரியை அக்கரையூராள் முபீதா அமீன் அவர்கள் ஏட்டுலா கனவாக்கம் அமைப்பினை வாழ்த்தி எழுதிய வாழ்த்துக் கவிதை செல்வி ரிப்தாவினாலும் இடம்பெற்றது.
ஏட்டுலா கனவாக்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினரான றஜா முஹம்மத் வெளியீட்டுரையினை நிகழ்த்தியதனைத் தொடர்ந்து நூல் வெளியீடு உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது.
New Royal Hotel(Liyanege Mulla seedhuwa) உரிமையாளர் – அல் ஹாஜ் எம்.டி.எம் ரஸான் அவர்களுக்கு நூலாசிரியை திக்ரா ஹனீபாவினால் முதல் பிரதி வழங்கப்பட்டதுடன், இரண்டாம் பிரதியானது நூலாசிரியையின் தாயார் திருமதி. நூருல் ஹிதாயா அவர்களுக்கும் நூலாசிரியர் திக்ரா ஹனீபா மூலமே வழங்கி வைக்கப்பட்டது.
அதனையடுத்து ஏட்டுலா கனவாக்கத்தின் மூலம் வெளியீடு செய்யப்படுகின்ற திக்ரா ஹனீபாவின் வாப்பாக்கு எனும் கவிதை நூலிற்காக ஏட்டுலா கனவாக்கத்தினால் நூலாசிரியையிற்கு கன்னிப்படைப்பு விருதும் ,பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஐ.எம் ஜமீல் ஆசியரால் நூல் நயவுரையும்,மெளலவி ஐ.எம் நிஸாம் அவர்களால் நூல் விமர்சனமும் செய்யப்பட்டது.
பிரதம அதிதியாக வருகை தந்திருந்த கலாநிதி. அஷ் ஷெய்க் முனீர் சாதிக் (காஷிபி) தலைவர் – தெல்தோட்டை பள்ளிவாசல்கள் சம்மேளனம் உபதலைவர்களில் ஒருவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா- தெல்தோட்டை கிளை.
அகில இலங்கை சமாதான நீதவான் அவர்களால் சிறப்பான முறையில் பிரதம அதிதி உரை நிகழ்த்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்றைய நிகழ்வின் முக்கிய கதா பாத்திரமான திக்ரா ஹனீபா, ஏட்டுலா கனவாக்கத்தின் பணிப்பாளர் ஆஷிக் ஹுசைன் அவர்களுக்கு நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கி கெளரவப்படுதினார்.
இறுதியாக நூலாசிரியை திக்ரா ஹனீபா அவர்கள் தனது நூல் வெளியீட்டிற்கான ஏற்புரையினை நிகழ்த்தினார்.
விழாவிற்கு வருகை தந்த பிரதம அதிதி,இலக்கிய அதிதிகள்,கெளரவ அதிதிகள் விசேட அதிதிகள்,அதிபர்,ஆசிரியர்கள்,ஏட்டுலா கனவாக்கத்தின நிர்வாக உறுப்பினர்கள்,ஊர் மக்கள் மற்றும் நூலாசிரியையின் குடும்ப அங்கத்தவர்களுக்கான நூல் பிரதிகளும் நூலாசிரியை திக்ரா ஹனீபாவின் கரங்களாலேயே வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கியிருந்தார், ஆதவன் வானொலியின் செய்தி வாசிப்பாளரும்,தொகுப்பாளருமான சகோதரர் முஸ்னி முர்ஷித் அவர்கள்.
ஸலவாத்துடன் ஏட்டுலா கனவாக்கத்தின் இரண்டாம் புத்தக வெளியீடு இனிதே நிறைவு பெற்றது.
ஏட்டுலாவின் கனவை நோக்கிய பயணத்தில் அடுத்த ஏட்டுலாவும் வெற்றிகரமாக நிறைவடைந்தது அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த (10.05.2024) அன்று ஏட்டுலா கனவாக்க பணிப்பாளர் ஆஷிக் ஹுசைன் அவர்களுடன் இணைந்து மொத்தம் 09 பேர் கொண்ட ஒரு குழுமமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு ,இரண்டு மாதங்களில் அதன் முதலாவது வேலைத் திட்டத்தினை செவ்வனே செய்து முடித்து தற்போது இரண்டாவது நூலினையும் மிகச் சிறப்பான முறையில் கண்டி மண்ணில் வெளியீடு செய்திருக்கின்றது.
இலைமறைகாய்களாக சமூகத்தில் இருக்கும் எழுத்தாளர்களை இனம் கண்டு அவர்களுடைய புத்தகக் கனவை நனவாக்கம் செய்வதே இவ்வமைப்பின் பிரதான நோக்கமாகும்.
ஹெம்மாதகை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட ஏட்டுலா கனவாக்கத்தின் பணிப்பாளர் ஆஷிக் ஹுசைன் இன் முயற்சியால் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 06 மாதங்களிலேயே அதன் இரண்டாவது கனவையும் நனவாக்கியமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
ஏட்டுலா கனவாக்கம் அமைப்பின் குழும உறுப்பினர்கள்:-
- ஆஷிக் ஹுசைன் (பணிப்பாளர்-ஏட்டுலா கனவாக்கம்)
- திரு. அமின் முஹம்மட் (பிரதம ஆசிரியர்-தமிழ் நெஞ்சம்-பிரான்ஸ்)
- திரு.ஜே.எம்.ஐ இஹ்சான் (பிரதம ஆசிரியர் முத்திதழ் சஞ்சிகை)
- திரு. முஹம்மட் இன்ஷாப் (பணிப்பாளர் Rj Media)
- திரு.றஜா முஹம்மட் (பிரதம ஆசிரியர் பேனாத்துளிகள் சஞ்சிகை)
- திருமதி. ஆயிஷா ஷகீலா ( வடிமைப்பாளர்-Design glitz)
- செல்வி.பஹ்ரியா பாயிஸ் (இளம் எழுத்தாளர் – ஹெம்மாதகமை பிராந்தியம்).
- செல்வி.அதீகா மசூர் (Sky தமிழ் கேகாலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்).
- செல்வி.ஹாஸ்மியா தாஹா ( இளம் எழுத்தாளர் பல்கலைக்கழக மாணவி-SEUSL).
அடுத்த ஏட்டுலா ஒரு கனவை நோக்கிய பயணமிது …அல்ஹம்துலில்லாஹ்