சக வாழ்வினை வளர்ப்பதில் பள்ளிவாசல் நிர்வாக சபை பங்கு முக்கியமானது; முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ்
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒருநாள் செயலமர்வு நவம்பர் 03 ஆம் திகதி பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். எஸ். எம். நவாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக மாவத்தகம பிரதேச செயலாளர் எம். எஸ் ஜனாக அவர்களுடன் இதில் உதவிப் பணிப்பாளர் எம். எஸ். அலா அஹ்மட், வக்பு சபையின் பதில் செயலாளர் எம். என். ரோசன், எம். ஐ. முனீர், ஏ.எம். ரிஸ்மி, உதவிப் பணிப்பாளர் என். நிலூபர் ஆகிய அதிகாரிகள் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
அத்துடன் மாவட்ட கலாசார உத்தியோகஸ்தர் இஹ்சான் மரைக்கார், இக் கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், இலங்கை வக்பு சபை மற்றும் வக்பு நியாய சபை பற்றிய அறிமுகம், பள்ளிவாசல் ஒரு சமூக மையம், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சேவைகள் மற்றும் அதன் செயற்பாடுகள், குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பொது பாடத்திட்ட அறிமுகம் ஆகிய தலைப்புகளில் விளக்கங்கள் இங்கு வழங்கப்பட்டன.
இக்கருத்தரங்கில் குருநாகல் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
(இக்பால் அலி)