தொடர் தோல்வியால் முதலிடத்திலிருந்து கீழிறங்கியது இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்து 2ஆம் இடத்திற்கு கீழிறங்கியது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையால் ரி20 மற்றும் ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டிகளைப் போன்று 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடத்தப்பட்டு சம்பியன் கிண்ணம் வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய டெஸ்ட் போட்டிகளில் 2 ஆண்டுகளில் கிரிக்கெட் அணிகள் பெறும் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் முதல் 2 இடங்களைப் பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அதற்கமைய இதுரையில் 2 டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் இடம்பெற்றுள்ளன. அதில் முதல் முறை தொடரில் அவுஸ்திரேலிய அணியும், 2ஆவது தொடரில் நியூஸிலாந்து அணியும் சம்பியன் மகுடத்தை வென்றிருக்க, இரு முறையும் இந்திய அணி இறுதிப் போட்டியில் பங்கேற்று தோல்வியடைந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற ஒவ்வொரு அணியும் தீவிரமாக வெற்றிகளை குவித்து வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக அதிக வெற்றி சதவீதங்களை பெற்று இந்தியா முதலிடத்திலும், அவுஸ்திரேலியா 2 ஆவது இடத்திலும் இருந்தன. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அடைந்த தோல்வியால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 68.06 ஆக குறைந்தது.
மேலும் 2 ஆவது டெஸ்டில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில்இ வெற்றி சதவீதம் மேலும் குறைந்து 62.82 ஆக இருந்தது. இந்நிலையில் இத் அதாடரின் 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை 3:0 என இழந்தமையால் வெற்றி சதவீதம் 58.33 ஆக மேலும் குறைந்துள்ளது. இதன் மூலம் முதல் நிலையிலிருந்த இந்திய அணி 2ஆம் இடத்திற்கு கீழிறங்கியது. அதனால் 2ஆம் இடத்திலிருந்த அவுஸ்திரேலியா முதலிடத்திற்கு உயர்வு பெற்றது. மேலும் அடுத்த 3 இடங்களில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)