சுயேட்சைக் குழு 11 ன் வெற்றிக்கு அக்குறணை மக்களின் வகிபாகம் முக்கியமானது; வேட்பாளர் இஸ்திஹார் இமாமுதீன்
தேர்தல் இறுதிப் பிரச்சார கால கட்டத்தில் போலியான பொய் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டு சேறு பூசி மக்களின் வாக்குகளை சிதறடிக்கின்ற காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது அவர்களுடைய இயலாத் தன்மையை வெளிப்படுத்துகின்ற தேர்தல் நடவடிக்கையாகும். எது எவ்வாறாயினும் அக்குறணை பிரதேசத்தில் பெரு எண்ணிக்கையிலான முஸ்லிம் வாக்காளர்கள் இருக்கின்றார்கள். இம்முறை கண்டி மாவட்டத்தில் சுயெச்கைக் குழு 11 இல் காற்பந்து சின்னத்தில் போட்டியிடும் அணியில் இருந்து இரு வேட்பாளாகள் நிச்சயமாகத் தெரிவு செய்யப்படுவார்கள். எனவே இதன் போது அக்குறணை பிரதேச மக்களின் வகிபாகம் முக்கியத்துவம் பெற வேண்டும் என்று முன்னாள் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளரும் கண்டி மாவட்ட சுயெச்சைக் குழு 11 இல் காற்பந்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருமான இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் சுயெச்சைக் குழு 11 இல் காற்பந்து சின்னத்தில் போட்டியிடும் அணியினரின் தேர்தல் அலுவலகம் அக்குறணை 7 ஆம் மைல் அமைந்துள்ள இடத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய சுயெச்சைக் குழு 11 இல் காற்பந்து சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் அக்குறணை பிரதேச சபையின் தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கண்டி மாவட்டத்தில் தேர்தல் வரலாற்றில் புதிய சரித்திரம் எழுதப்பட இருக்கின்றது. அந்த வரலாற்றில் அக்குறணை மக்கள் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அரசியல் ரீதியாக நாங்கள் வந்தாரை வாழ வைக்கும் சமூகம் ஆகும். அந்த வகையிலே கொழும்பில் இருந்து வந்த அபேட்சகர்களை வெற்றி வாகை சூட வைத்தோம். குறிப்பாக பாராளுமன்றத் தேர்தலிலும் மற்றும் மாகாண சபைத் தேர்தலிலும் அனுப்பி வைத்த பங்கு அக்குறணை மண்ணுக்கு இருக்கின்றது. அந்த வகையில் கண்டி மாவட்டத்தில் யஹலதென்னையில் இருந்து வருகை தந்துள்ள ஹிதாயத் சத்தார். கடந்த ஆறு வருடங்களாக உங்களின் நலன் மேம்பாட்டுக்காக என்னை அர்ப்பணித்து சேவையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.
எங்கள் இருவரையும் பாராளுமன்ற அனுப்புவதற்கு முழுமையான பங்களிப்பை பெற்றுத் தர வேண்டும் கண்டி மாவட்டத்தின் தேர்தல் வரலாறு புதிய வரலாறாக எழுதப்பட இருக்கின்றது. அதில் அக்குறணை மக்கள் முக்கிய பங்காளியாக மாற வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்தச் சுயெச்சையணியில் போட்டியிடுகின்ற வேட்பாளர் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் உரை நிகழ்த்தினார்.
(இக்பால் அலி)