உள்நாடு

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மலையக மக்களின் பிரச்சனைகள் தொடர்பான ஊடக சந்திப்பு

பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மலையக மக்களின் காணி மற்றும் ஏனைய பிரச்சினைகளை அரசுக்கு அதனுடன் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கும் முன்வைக்கும் முகமாக கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியது

பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்டன் ஜேசுதாஸன் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊடக சந்திப்பில் காலி. மாத்தறை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களின் பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள மலையாக மக்களுக்காக 1993 ம் ஆண்டு முதல் 2024 ம் ஆண்டு வரை பல்வேறு திட்டங்களின் மூலம் வழங்கப்பட்ட காணிகளை பெற்ற சகல குடும்பங்களையும் பற்றிய தகவல்களை சேகரித்து தகவல் கோவை ஒன்றை தயாரித்தல் அதற்கு ஆதரவளிக்க பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு தயாராக உள்ளது என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

நிலம் பெற்றுக் கொண்டவர்களில் 100 இல் 80 க்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை ஆவணங்கள் எதுவும் வழங்கப்படாததால் அவர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உறுதி பத்திரம் ஒன்றை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காணிகளை பெற்றுக் கொண்ட குடும்பங்கள் பொருளாதார சிக்கல்களினால் காணியில் வீடு கட்ட முடியாமல் தவிக்கும் குடும்பங்களை பற்றிய தகவல்களை கண்டறிந்து அவர்களின் காணியில் வீடு கட்டுவதற்கான உதவித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தல்.

ஒட்டுமொத்த மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பொதுத் தேர்தல் போட்டியிடும் அனைத்து அரசியல்வாதிகளும் கூடிய கவனத்தை செலுத்த வேண்டும்.

நாட்டில் வாழுகின்ற அனைத்து மலையக மக்களுக்கும் குறைந்தது 20 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும்.

பல அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் தனியார் தோட்டங்களில் வாழுகின்ற மக்கள் தங்கள் பிரச்சினைகளை வெளியில் சொல்வதற்கு அஞ்சுகின்றனர் எனவே இவர்கள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *