கொழும்பில் விமர்சையாக நடைபெற்ற துருக்கியின் குடியரசு தினம்
துருக்கி நாட்டின் 101 வது குடியரசு தினம் நேற்று 29 கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஹோட்டலில் இலங்கைக்கான துருக்கித் தூதுவர் செமி லிற்டிபு துர்கட் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் கலந்து கொண்டு துருக்கி -இலங்கை நட்புறவு பற்றி உரையாற்றினார்
மேல் மாகாண ஆளுநர் அங்கு உரையாற்றுகையில் துருக்கி -இலங்கை பெருமளவில் சிலோன் டீ கொள்வனவு செய்யும் நாடாகும் அத்துடன் துருக்கி இலங்கைக்கு கடந்த இயற்கை அனர்த்தங்கள் காலத்தில் உதவி செய்துள்ளன. அத்துடன் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும் துருக்கி இலங்கை நட்புறவு, அபிவிருத்தி, விமானப் போக்குவரத்து. கல்வி புலமைப்பரிசில்கள் ஊடக பயிற்சி போன்ற விவகாரங்கள் மேலும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஆளுநர் அங்கு உரையாற்றினார்.
இந் நிகழ்வின்போது துருக்கி தூதுவர் இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து இரு நாடுகளுக்குமான இராஜதந்திர உறவு இருந்து வருகின்றது. துருக்கி உல்லாசப் பிரயாணிகள் மற்றும் துருக்கி தென்கிழக்கு பல்லைக்கழகம் அம்பாறை வடிகாலமைப்பு விவசாயம் புவி ஆராய்ச்சி போன்ற துறைகள், இலங்கை இளைஞர்கள் தொழிற்பயிற்சி,உயர்கல்வித்துறை புலமைப்பரிசில் திட்டம் போன்றவற்றில் உதவி வருவதாகவும் துருக்கி தூதுவர் அங்கு உரையாற்றினார்.
இந் நிகழ்வில் முப்படை தளபதிகள், இராஜதந்திரிகள், துருக்கி நாட்டில் புலமைப்பரிசில் உயர்கல்வியை தொடர்ந்தவர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
(அஷ்ரப் ஏ சமத்)