Thursday, October 31, 2024
Latest:
உள்நாடு

புகையிரத நிலைய அதிபர்களின் பணி நிறுத்தம் கைவிடப்பட்டது..!

நாடளாவிய ரீதியாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று (30) நள்ளிரவுடன் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்களின் போக்குவரத்த நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இன்று (30) மாலை 4.30 மணிமுதல் பயணச்சீட்டு விநியோக நடவடிக்கைகளில் இருந்து விலகவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.

பல கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் புகையிரத திணைக்களத்தின் நிறைவேற்று அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே நிலைய அதிபர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *