உள்நாடு

தீபாவளியை முன்னிட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை (31) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு நாளை மறுநாள் (01) சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, 01.11.2024 அன்று தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும், அன்றைய கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 09.11.2024 அன்று நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *