ஆசிரியர் சேவை சங்கத்தின் முயற்சியால் சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் தீபாவளி விடுமுறை..!
எதிர்வரும் 31 ஆம் திகதி தீபாவ ளி பண்டிகை காரணமாக அடு த்து வரும் முதலாம் வெள்ளிக் கிழமை தினத்தில் சப்ரகமுவ மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பீ. ஏ.சீ.பி.பமுனு ஆரச்சி தீர்மானித்துள்ளார்
தீபாவளி தினத்துக்கு அடுத்த தினம் 1 ஆம் திகதி பாடசாலை தினமாக அமைந்தால் தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதா ல் இத்தினத்தில் விடுமுறை வழங்குமாறு இலங்கை ஆசிரிய ர் சேவைச் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் தேசிய மக்கள் சக்தி இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் மாகாண கல்வி அமைச்சு செய லாளரிடம் வேண்டுகோள் விடு த்ததையடுத்து இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலீடாக எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமையில் பாடசாலையை நடத்துமாறு செ யலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
(ஏ.ஏ.எம்.பாயிஸ்)