நடப்பாண்டின் பலோன் டி ஆர் விருதை வென்றெடுத்தார் ஸ்பெய்னின் ரோட்ரி
உலகின் சிறந்த கால்பந்து வீரருக்காக வருடாருடம் வழங்கப்படுகின்ற பலோன் டி ஆர் விருதினை 4ஆவது முறையாகவும் ஸ்பெய்னின் தடுப்பு வீரரான ரோட்ரி தனதாக்கினார்.
உதைப்பந்தாட்ட உலகில் சிறந்த பெறுபேறுகளை பெற்று அணிக்கும் , தாம் பங்கேற்கும் கழகத்திற்கும் கிண்ணங்களை வென்று கொடுப்பதில் முன்னிலை வகிக்கும் வீரர் தெரிவு செய்து வருடா வருடம் உலகப் புகழ் பெற்ற பலோன் டி ஆர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நடப்பாண்டின் பலோன் டி ஆர் விருதை ஸ்பெய்ன் அணியின் தடுப்பு வீரரும் , மென்செஸ்டர் சிட்டி கழகத்தின் தடுப்பு வீரருமான ரோட்ரி வெற்றெடுத்தார். அதற்கமைய பலோன் டி ஆர் விருதை ரோட்டி 4ஆவது முறையாக வென்றுள்ளமை சிறப்பம்சமாகும்.
அதே வேளையில் ரியல்மாட்ரிட் கழகம் இந்த விழாவை முழுமையாக புறக்கணித்துள்ளது. காரணம் உலகின் சிறந்த வீரருக்கான பரிசை ஒரு தற்காப்பு ஆட்டக்காரருக்கு வழங்குவதற்கான முடிவை மெட்ரிட் கழகத்தினர் எதிர்த்திருந்தார்கள். மேலும் லா லீகா சம்பியன்ஸ் லீக் வெற்றியாளரான ரியல்மாட்ரிட்டின் முன்கள வீரரான வினிசியஸ் ஜூனியர் விழாவிற்கு முன் பட்டியலில் முன்னணியில் காணப்பட்டார். இந்நிலையில் பாரிஸில் நடந்த விழாவிற்கு சில மணி நேரங்களுக்கு முன்புஇ ரியால்மாட்ரிட் கழகம் அதன் பிரதிநிதிகள் இந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தது. இதனால் வினிசியஸ் ஜூனியர் வெற்றி பறிக்கப்பட்டது.
28 வயதான ரோட்ரி கடந்த சீசனில் பிரிமியர் லிக் கிண்ணத்தை வெல்வதற்கான அர்செனலின் சவாலை முறியடித்ததில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் யூரோ 2024 இல் ஸ்பெயின் ஜெர்மனியில் சாம்பியனாக உருவெடுத்ததால் போட்டியின் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் காரணமாக நடப்பாண்டின் பலோன் டி ஆர் விருதி ரோட்ரி வவசமானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)