உள்நாடு

மாவட்டத்தில் சிறந்த பெறுபேறு; கீரகல தமிழ் வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

இரத்தினபுரி மாவட்டத்தில் க. பொ.த சாதாரண தரப்பரீட்சை யில் கடந்த பல வருடங்களாகச் சிறந்த பெறுபேறுகளை பெற்று வரும் இ/கீரகல தமிழ் வித்தியாலய மாணவர்கள் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி கெளரவிக்கப்படவுள்ளனர்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மாணவர் சங்கம் உட்பட நலன் விரும்பிகளால் எதிர்வரும் நவம்பர்மாதம் 21 ஆம் திகதி இப் பாராட்டு விழாவினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பாடசாலை அதிபர் ஜே.டேமிய ன் தெரிவித்தார்.

இப்பாடசாலை மாணவர்கள் க டந்த கடந்த 2022 ஆம் ஆண்டிலும் 2023 ஆம் ஆண்டிலும் குருவி ட்ட கல்விக்கோட்டம் இரத்தினபுரி கல்வி வலயம் மட்டுமன்றி இரத்தினபுரி மாவட்டத்திலும் தமிழ் மொழிப் பாடசாலைகளில் இப் பரீட்சையில் முதலிடத்தை பெற்றுள்ளனர். 2024ஆம் ஆண்டிலும் இம்மாணவர்கள் இம்மாவட்ட த்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் இரத்தினபுரி கல்வி வ லயத்தில் சிங்களத் தமிழ் மொழி மூல பிரபல பாடசாலைகளில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ் மொழிப் பாடசாலைகளில் தேசிய பாடசாலைகள் மத்திய கல்லூரிகள் மகா வித்தியாலயங்கள் ஆகிய பல வசதிகளுடன் போட்டி போட்டு வெளி வகுப்புகளுக்கு செல்லாமல் இப்பாடசாலையில் கடமையாற்றும் ஆசி ரியர்களினால் மட்டும் கற்பிக் கப்பட்டு அதிபரின் வழிநடத்தலில் இம்மாணவர்கள் இச்சிற ந்த பெறுபேறுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2017 ஆம் ஆண்டில் 9 ஆம் வகுப்பு வரை இயங்கிய 92 மாணவர் களுடன் பொறுப்பேற்கப்படப் பாடசாலையை இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு பிரபலமான சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுத்தரும் கணித விஞ்ஞான துறைகளுக்கு தகுதி பெறும் மாணவர்களை உருவாக்கும் பாட சாலையாக உருவாகத் தனது ஆசிரியர்களின் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்பே கா ரணம் என பாடசாலை அதிபர் ஜே.டேமியன் தெரிவித்தார்.

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *