எலந்தகொட சம்பியன் லீக் கிரிக்கெட் தொடர் வியாழனன்று ஆரம்பம்
பேருவளை எலந்தகொடை செம்பியன் லீக் – 2024 மாபெரும் கிரிகட் சுற்றுப் போட்டி எதிர் வரும் 31ம் திகதி (31-10-2024) வியாழக்கிழமையும் 2ம் திகதி (2-11-2024) சனிக்கிழமையும் 3ம் திகதி (3-11-2024) ஞாயிற்றுக்கிழமையும் பேருவளை மாளிகாஹேனை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.
எலந்தகொடை பகுதியில் ஒற்றுமையை சக்தி பெறச் செய்யும் உயர்ந்த நோக்குடன் இந்த கிரிகட் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணிக்கு 11பேர் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் எலந்தகொடை பகுதியைச் சேர்ந்த 12 கிரிகட் அணிகள் பங்குபற்றுகின்றன.
31 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு போட்டி ஆரம்பமாவதோடு 3 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு இறுதிப் போட்டியும் பரிசளிப்பு வைபவமும் இடம்பெறும். பரிசளிப்பு விழாவில் பல பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
எலந்தகொடை வெற்றி கிண்ணத்திற்காக நடைபெறவுள்ள போட்டிக்கு 12 பிரதான அனுசரணையாளர்களும் 12 இணை அனுசரணையாளர்களும் பங்களிப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மேற்படி கிண்ண அறிமுக நிகழ்வு 27ஆம் திகதி (27-10-2024) மாலை பேருவளை மொரங்கல்ல ஸபயர் வரவேற்பு மண்டபத்தில் (SAPPHIRE BANQUET )நடைபெற்றது.
பிக்ஸிட்டி நிறுவனம் மற்றும் ஸிமி ஹோல்டிங் நிறுவனம் ஆகியவற்றின் முகாமைத்துவ தலைவர் சேகு யூஸுப் முஹம்மத் இஜ்லான் ஹாஜியார்,இரத்திக்கள் வர்த்தகர் அரூஸ் ஹாஜியார்,தெழிலதிபர்கள் உட்பட ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசிய பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் உஸ்மான் ஹாஜியார் உட்பட அதிதிகள் 12 விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கிரிகட் சுற்றுப் போட்டு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஸிமி ஹோல்டிங் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் முகாமைத்துவ தலைவர் சேகு யூஸுப் முஹம்மத் இஜ்லான் ஹாஜியார்.
பேருவளை எலந்தகொடை பகுதியில் பகுதியில் இஸ்லாமிய ஒற்றுமையை சக்தி பெறச் செய்யும் நோக்குடன் 12 கிரிகட் கழகங்களுக்கிடையே கிரிகட்சுற்றுப்பட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்கதாகும் எலந்தகொடை செம்பியன் லீக் நிகழ்வு வெற்றிகரமாக முடிய வாழ்த்துகிறேன் என்றார்.
பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உஸ்மான் ஹாஜியார் கருத்து தெரிவித்த போது எலந்தகொடை பகுதியில் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.அவர்களை ஊக்குவித்து உற்சாகமளிக்க வேண்டும்.எலந்தகொடை கிராம மக்களின் முழுமையான ஒத்துழைப்புடன் இப் போட்டி நடாத்தப்படுகிறது என்றார்.
இரத்தினக்கல் வர்த்தகர் அரூஸ் ஹாஜியார் கருத்து தெரிவிக்கையில் எலந்தகொடை வரலாற்றில் முதல் தடவையாக ஒற்றுமையை வலியுறுத்தி இவ்வாறான ஓர் கிரிகட் சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன் என்றார்.
இந்த நிகழ்வில் ஜேசி சீருடையும் அறிமுகம் செய்யப்பட்டன 12 கழகங்களின் தலைவர்களுக்கும் மேடையில் வைத்து அனுரசனை வழங்கும் பிரமுகர்களினால் ஜேசி சீருடை கையளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(பேருவளை பீ.எம்.முக்தார்)