ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் அனர்த்த முன்னாயத்த கூட்டம்
வட கீழ் பருவப் பெயர்ச்சி கால நிலையை எதிர்கொள்ள தயாராகுவதற்கான முன் ஆயத்த கூட்டம் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் எதிர்வரும் வட கீழ் பருவப் பெயர்ச்சி காலமானது கூடிய அளவு மழை இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் அதனை எதிர்கொள்ள பிரதேச. மட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பிரதேச மட்டத்தின் அனர்த்த முகாமைத்துவக் குழுவின் பொறுப்புக்கள் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தெளிவு படுத்தப்பட்டது.
அத்துடன் பிரதேசத்தில் உள்ள வடிகான்களை சுத்தம் செய்வதுஇ டெங்கு ஒழிப்பு நடவடிக்கைஇ குடிநீர் வசதிகள்இ முதலுதவிஇ மீட்பு பணிகள் நலன்புரி நிலையங்கள் அமைத்தல்இ எரிபொருள் நிலையத்தில் அத்தியாவசிய தேவைக்கான எரிபொருள் இருப்புஇ உலர் உணவு வழங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம். தாரிக், பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எம்.றியாஸ், 232 ஆம் படைப்பிரிவு அதிகாரி லெப்டினண்ட் பி.எம்.ஐ.பாலசூரிய, 21 ஜி.டபள்யூ. படைப்பிரிவு கட்டளையிடும் அதிகாரி மேஜர் எஸ்.எம்.ஜி.வி.கே. பண்டார, நாவலடி இராணுவ முகாம் பொறுப்பதிகாரி டபள்யூ.எம்.ரீ. விஜயசுந்தர, சித்தாண்டி இராணுவ முகாம் கட்டளையிடும் அதிகாரி எல்.ஆர்.டி.ஏ.அபயரத்ன, மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல் நௌபர், ஒட்டமாவடி பிரதேச சபை பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.எம்.நவ்பல், மீன்பிடித் திணைக்கள அதிகாரி ஏ.எம்.நஜாத், வீதி அபிவிருத்தி அதிகாரசபை 8 பலரும் கலந்து கொண்டனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)