உள்நாடு

இந்தோனேஷிய தூதுவருடன் சர்வமதத் தலைவர்கள் சந்திப்பு

ஸ்ரீ லங்கா – தேசிய சர்வ மத குரு ஒன்றியத்தின் தலைவர் சாஸ்த்ரயதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக்க தேரர் தலைமையில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன்
இந்தோனேஷிய தூதுவர் தேவி குஸ்டினா டோபின்ங் அவர்களுடனான விஷேட கலந்துரையாடலொன்று இலங்கைக்கான இந்தோனேஷிய தூதரகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இக்கலந்துறையாடலில் சாஸ்த்ரயதி கலாநிதி கலகம தம்மரன்ஸி நாயக தேரர், சிவ ஸ்ரீ கலாநிதி ராமச்சந்திர பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நிஷான் சம்பத் குரே பாதிரியார் உட்பட பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சகல மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது இலங்கை மற்றும் இந்தோனேஷியா இருநாடுகளுக்கிடையில் மதங்களுக்கு இடையே மத நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை பேணுவதில், சர்வமத அமைப்பினரின் பங்கு முக்கியம் என்பதை பற்றியும், அதன் விரிவான திட்டங்கள் பற்றியும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டன.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *